தருமபுரி: திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழக ஆளுநர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார். தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திமுக பாசறை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாஞ்சில்சம்பத்,செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அ.தி.மு.க., அழிவின் விளிம்பில் இருப்பதாக தெரிவித்த அவர், ஜெயலலிதாவை அம்மா, அம்மா என்று சொல்லிகொண்டு மோடியை அப்பா, அப்பா என்று அழைப்பதும், வரவேற்பதற்கு ஒருவர் போவதும் வழி அனுப்புவதற்கு ஒருவர் போவதும் அதிமுகவின் வாடிக்கையாக உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அ. தி.மு.க.,வை ஒழிப்பதற்கு பா.ஜ.க, சதி திட்டம் தீட்டுகிறது என்றும், அந்த கட்சியின் சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த் நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,என்ற மாநில கட்சியை அழித்துவிட்டால், அந்த இடத்திற்கு பாஜக வந்துவிடலாம் என்று திட்டமிடுகிறதாக தெரிவித்தார். 



தமிழகத்தில் தற்போது நடந்து கொள்வது போலவே, இதற்கு முன்பு மேகாலயா, பீகார், மத்திய பிரதேசம், பாண்டிச்சேரியில் பாஜக செய்தது என்றும், தமிழக ஆளுநர் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்த முயற்சிப்பதாகவும் மாநில அரசின் உரிமைகள் மீது அத்துமீறுவதாகவும் அழிச்சாட்டியம் செய்வதாகவும் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டினார்.


சவக்குழிக்கு அனுப்பப்பட்ட சனாதனம் என்னும் செத்துப்போன தத்துவத்திற்கு உயிர் கொடுக்க துடிக்கும் பாஜக, திராவிட கொள்கையை பின்பற்றும் தமிழகத்தில் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. தனக்கு கிடைத்திருக்கிற  அதிகாரத்தை தமிழகத்தின் ஆளுநர், சனாதன கொள்கையை புகுத்துவதில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.


ஆனால், பாஜகவின் இந்த கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று கூறிய அவர், 44 வது ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு அடிப்படை கட்டமைப்பு, இந்திய அளவில் தமிழகத்தில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | அதிமுக வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை கூடாது: வங்கிக்கு ஓபிஸ் கடிதம்


வளர்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு இதுவே சாட்சி என்று கூறிய நாஞ்சில் சம்பத், இந்திய அரசியலில் கருத்தியல் ரீதியாக பாஜகவுக்கும் திமுகவுக்கும் நேர் எதிரியாக இருப்பது பிஜேபி என்று தெரிவித்தார். 


தொழில் வளத்தில் 4-வது இடத்திலிருந்த மோடி ஆட்சி செய்த குஜராத்தை பின்னுக்கு தள்ளி, 14 ஆவது இடத்திலிருந்த தமிழகத்தை 4-வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாகவும், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. என்றும் மோடியை வைத்துக் கொண்டே தமிழக முதல்வர், சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூறினார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.


நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்குமாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | தொடரும் திமுக Vs ஆளுநர்... சந்தேகப்படும் அமைச்சர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ