திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி: எந்த சின்னம் தெரியுமா?
திமுக கொமதேக கூட்டணி: திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறைப் போலவே நாமக்கல் தொகுதியில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் எனவும் அறிவிப்பு.
மக்களவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை அதிரடியாக உறுதி செய்து வருகிறது திமுக. தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை இறுதி செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது திமுக. அந்தவகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) ஆகிய கட்சிகளுடான கூட்டணியை உறுதி செய்து தொகுதி பங்கீட்டையும் முடித்துள்ளது.
மேலும் படிக்க | திமுக பக்கா பிளான் - ராமநாதபுரத்தில் மீண்டும் IUML... வேட்பாளரும் உடனே அறிவிப்பு!
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனை ஏற்றுக் கொண்ட அக்கட்சி உடனடியாக அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரையும் அறிவித்துள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்து தொகுதியை பங்கீட்டு ஒப்பந்தில் கையெழுத்திட்டது. அதன்படி கொமதே கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அக்கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்ட ஏகேபி சின்ராஜ் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக வேறொரு வேட்பாளர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாகர் ஈஸ்வரன் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை அண்ணா அறிவாலயத்தில் முடிவு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
அப்போது ஈஸ்வரன் பேசும்போது, “ திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட நாமக்கள் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த முறை திமுக சின்னத்தில் கொமதேக போட்டியிட்டதுபோலவே இம்முறையும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார். எம்பி ஏகேபில சின்ராஜ் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார். அதனால் கட்சி செயற்குழு கூட்டத்தில் விவாதித்து புதிய வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம்.” என கூறினார்.
மேலும் படிக்க | தேர்தல் முடிந்த உடன் இந்த காரியம்தான்... உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி தடலாடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ