தலைவர் கருணாநிதி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் -முன்னால் அமைச்சர்
கலைஞர் கருணாநிதி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று திமுக தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு கலைஞர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதனால் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதை அறிந்த பல திமுக தொண்டர்கள் கோபாலபுரத்திலும், காவேரி மருத்துவமனை முன்பும் குவிய தொடங்கினர்.
இதனைத்தொடர்ந்து திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கலைஞர் கருணாநிதியை பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவ தொடங்கின. இதனால் அவரின் உடல் நலம் குறித்து அறிந்துக் கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, முன்னால் மத்திய அமைச்சர் ஏ. ராஜா அவர்கள், தலைவர் கருணாநிதிக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது உண்மை தான். தற்போது தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். இதனால் உடல்நிலை சீராக உள்ளது. மேலும் தலைவர் கருணாநிதி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினார்