Udhayanidhi Stalin: சென்னை பெரியார் திடலில் நடந்த திமுக பாகநிலை முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதில்,"சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தியாவே நம் மாநாட்டை உற்று நோக்கினார். அந்தளவுக்கு மாநாட்டை நடத்தி காண்பித்தோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்டப்பெயர்கள் வேண்டாம்


அதற்கு உங்களுக்கு நன்றி. வாய்ப்பு கிடைத்தால் மத்திய சென்னையில் போட்டியிடுவேன் என தயாநிதி மாறன் கூறுகிறார். ஆனால் அவர் வேண்டாம் என்று சொன்னாலும் நிர்வாகிகளான நீங்கள் அவரை விடமாட்டீர்கள். எனவே, நான் அதனை நிச்சயமாக கேட்பேன். எனவே உங்களுக்கு வசதியான சிரித்த முகத்துடன் உள்ள வேட்பாளர் கிடைப்பார். 


எனக்கு பட்டப்பெயர்கள் வேண்டாம் தவிர்த்துவிடுங்கள். நான் சின்னவர்தான், உங்களைவிட வயதில் அனுபவத்தில்... எனவே சின்னவர், வாழும் பெரியார் போன்ற பட்டப்பெயர் வேண்டாம், தவிர்க்கவும். தொகுதி ஒருங்கிணைப்பு குழுவில் பங்கேற்ற நிர்வாகிகள் சொன்னதை வைத்து பார்த்தால் 40 தொகுதியில் வெற்றி வாய்ப்பு நமக்குதான்.


மேலும் படிக்க | “அமைச்சர் துரைமுருகனை விட எனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும்” அண்ணாமலை பேட்டி!


மகளிர் உரிமை தொகை


பாகநிலை முகவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு ஊக்க தொகை வழங்கி உள்ளார். பாஜகவுக்கு ஏன் வாக்கு செலுத்த கூடாது என நீங்கள் தான் வீட்டிற்கே சென்று சொல்ல முடியும். யாருக்கெல்லாம் 1000 மகளிர் ஊக்கத் தொகை கிடைக்கவில்லை என்ற பட்டியல் கொடுத்தால் நான் முதல்வரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன். ஏனெனில் 90% தகுதி வாய்ந்த மகளிர் பயன்பெற்றாலும் அவர்கள் நம்மை பாராட்ட மாட்டார்கள். ஆனால் கிடைக்காத 10% மகளிர் விமர்சனம் செய்வார்கள் என்பது இயற்கை.



9 வருட பாஜக ஆட்சி...


மத்தியில் யார் வர வேண்டும் என நாம்தான் முடிவு செய்வோம். நம்மை பயம்புறுத்தும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஆனால் அதற்கெல்லாம் நாம் அஞ்சமாட்டோம். எதிர் கட்சியாக இருக்கும் போது வாங்கி வாக்கை விட இந்த தேர்தலில் வாக்கு குறைந்தால் நம் செல்வாக்கு குறைந்ததாக விமர்சனம் செய்வார்கள்


9 வருட பாஜக ஆட்சியில் சிஏஜி அறிக்கையில் 7 லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை. ரமணா படத்தில் வரும் மருத்துவ காட்சியை போல 88000 இறந்த நபருக்கு மருத்துவம் பார்த்தாக பாஜக முறைகேடு செய்துள்ளனர்.


சாமி கும்பிட்டு உதய சூரியனுக்கு ஓட்டு...


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை கொடுத்து பேசுங்கள் என கூறினார். நான் அடுத்த நாளே மரியாதை கொடுத்தேன். ஆனால் நான் கேட்ட நிதியை மட்டும் அவர்கள் ஏன் கொடுக்கவில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கோயில் கட்டுங்கள், நாங்கள் சேகர்பாபுவை அனுப்பி வைக்கிறோம். தமிழ்நாடு மக்களும் நல்லா சாமி கும்பிட்டுவிட்டு உதய சூரியனுக்குதான் வாக்கு செலுத்துவார்கள்.


ஓபிஎஸ் - இபிஎஸ் கைது


ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கைதாகவார்கள் யார் முதலில் கைதாவார்கள் என்றுதான் போட்டி... இபிஎஸ் சொல்கிறார் ஓபிஎஸ் தான், முதலில் கைது செய்யப்படுவார் என்று, ஓபிஎஸ் சொல்கிறார் இபிஎஸ் தான் முதலில் கைது செய்யபடுவார் என்று, எனக்கு ஒரே நேரத்தில் இருவரும் கைதாவார்கள் என நினைக்கிறேன். ஆனால் அப்படி கைது செய்தால் தவழ்ந்து செல்ல வேண்டாம் கால் வலிக்கும்" என்றார். 


மேலும் படிக்க | நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ