வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் "என் மண் என் மக்கள்" நடை பயணத்திற்கு பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், நேற்று நீங்கள் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டின் கதவை அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் தட்ட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருந்தீர்கள்.. அதற்கு அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு கதவை தட்டும் கஷ்டம் வேண்டாம். நாங்களே திறந்து வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளாரே என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் அப்படி சொல்லவில்லையே. நான் அமலாக்கத்துறை என்ற வார்த்தையை பயன்படுத்தினேனா. எம்பி கதிர் ஆனந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தினேனா. யாரெல்லாம் மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் கதவை அரசு தட்ட தான் போகிறது. நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம் தான். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என்ற எந்த வார்த்தையையும் நான் பயன்படுத்தவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம், சேர்ந்து வரலாம், தனித்தனியாக வரலாம், நாளைக்கு வரலாம், அடுத்த வாரம் வரலாம். இப்படியாக நான் யூகிக்க முடியும்” என நேற்று பேசியதற்கு நேர் மாறாக இன்று பேட்டி அளித்தார்.
தமிழகம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளதாக நீங்கள் தெரிவித்ததற்கு, அண்ணாமலை என்ன பொருளாதாரம் நிபுணரா என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாரே என அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்," நான் லக்னோவில், எம் பி ஏ ஃபினான்ஸ் படித்துள்ளேன். 10 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 99.4 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளேன். கொஞ்சம் ஃபினான்ஸ் தெரியும். அமைச்சர் துரைமுருகனுக்கு தெரிந்ததை விட எனக்கு ரொம்ப அதிகமாக பினான்ஸ் தெரியும். எனக்கு ஒரு ஸ்டேட்மெண்டை படிக்க தெரியும். பட்ஜெட் டாக்குமெண்டை படிக்க தெரியும். மாநிலம் எதை நோக்கி செல்கிறது என்பது தெரியும். அமைச்சர் துரைமுருகன் வேண்டுமானால் படிக்காமல் இருக்கலாம் .அந்த கதையை என்கிட்ட ஓட்ட வேண்டாம்” என கூறினார்.
மேலும் படிக்க | அதிமுக - பாஜகவை சேர்க்கும் முயற்சியில் ஜிகே வாசன்? அவரே சொன்ன பதில்!
சீமான் குறித்து கருத்து..
சீமான் குறித்து பேசிய அண்ணாமலை, “சீமானின் கட்சி வேகமாக கலைந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை வம்புக்கு இழுத்தால் புதிய இமேஜ் கிடைக்கும் என்பது தமிழகத்தில் புது ஸ்டைலாக உள்ளது. எப்போதும் சீமானின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மனிதன் நான். தமிழ்நாட்டை எங்கே கொண்டு செல்ல வேண்டும் என்பதில் எனக்கென ஒரு இலக்கு உள்ளது, கனவு உள்ளது. நாங்கள் பிரிவினை வாதத்தை பேசக்கூடியவர்கள் அல்ல.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனராக நான் இருந்தால் 11 பேரையும் தமிழ்நாட்டுக்காரன்களை தான் விளையாட வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அந்த அளவுக்கு தகுதி உடையவர்களாக உருவாக்குவேன் என்று சொல்லுவேன்.
தமிழகத்தில் இருக்கக்கூடியவர்களை இந்தியா முழுவதும் உள்ள ஐபிஎல் டீமில் விளையாட வைப்பேன் என்று சொல்லுவேன் என்று தவிர நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சீமான் சொல்வது போல சென்னை சூப்பர் கிங்ஸில் 11 பேர் இவர்கள் தான் விளையாடுவார்கள் என்று சொல்ல மாட்டேன். காரணத்தோடு பேசுபவன் நான். எதையோ ஒன்று பேசுபவன் நான் எனக்கும் சீமானுக்கும் நிறைய வேறுபாடுகள் வித்தியாசங்கள் உள்ளது. என்னுடைய அரசியல் பாதை அவருடைய அரசியல் பாதை முற்றிலும் வேறு. அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த சித்தாந்தம் மக்களுக்கு வேண்டும் என அவர்களே முடிவெடுக்கட்டும்," என்றார்.
மேலும் படிக்க | அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ