கோவில்களின் ஆகமங்களை மாற்றவேண்டாம்! ஆதி சைவ சிவாச்சாரியார் கூட்டமைப்பு கோரிக்கை!
Adi Saiva Sivacharya Federation demands: ஆகம முறைப்படியான கோவில்களில் தொன்று தொட்டு நடைபெற்று வரக்கூடிய எந்த சம்பிரதாயங்களையும் தமிழக அரசும் அறநிலையத் துறையும் மாற்றம் செய்யக்கூடாது என சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்....
குல தெய்வம் கோவில் உட்பட தொன்று தொட்டு எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக இருக்கக்கூடிய நிலை தமிழகத்தில் இருந்து வரும் நிலையில், தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு தேவையில்லாத ஒன்றுதான் எனவும் அனைத்து அர்ச்சகர்களுக்கும் இந்து அறநிலைதுறை பாதுகாப்பை வழங்க வேண்டும் என கோவையில் சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஆதி சைவ சிவாச்சாரியார் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் நிறுவன தலைவர் கலிஃபோர்னியா சுவாமிநாதன் மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு இடைக்கால தடை வாங்கிய வழக்கறிஞர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஐயப்பன், ஆகம முறைப்படியான கோவில்களில் தொன்று விட்டு நடைபெற்று வரக்கூடிய எந்த சம்பிதாயங்களையும் தமிழக அரசும் அறநிலையத் துறையும் மாற்றம் செய்யக்கூடாது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 52 பேருக்கான பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கிய நிலையில் அந்தப் பணி நியமன ஆணைக்கு எதிராக தாங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்து அதில் ஆகஸ்ட் 2022 இல் தமிழகத்தின் தலைமை நீதிபதி ஆகம விதிப்படியே பூஜைகள் நடத்த வேண்டும் வேறு ஏதும் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தால் நியமனம் செல்லாது என்றும் அப்படி நியமனம் இருந்தால் அதற்கு எதிராக வழக்கு தொடரலாம் என்றும் கூறியிருந்ததாகவும் அதன் அடிப்படையில் மீண்டும் வயலூர் முருகன் கோவிலில் இரண்டு பேர் பணி நியமனம் செய்யப்பட்டதால், அந்த கோவிலில் பணி செய்யக்கூடிய இரண்டு அர்ச்சகர்கள் அறநிலையத்துறைக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | செவ்வாய் தோஷத்தை போக்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பது எப்படி?
அந்த வழக்கின் தீர்ப்பிலும் அந்த இரண்டு பேருக்கும் 8 வாரங்களுக்கு ஆகம விதி அல்லாத கோவில்களில் அவர்கள் பணி செய்ய வேண்டும் என்றும் ஆகம அடிப்படையில் செயல்படும் கோவில்களில் பணி செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தார்கள் என்றார்.
அந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அதை மட்டும் அல்லாமல் இன்னும் பல வழக்குகளில் தனித்தனியாக உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஆதி சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம் பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அந்த வழக்குகளில் கடைசியாக செப்டம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மறு தீர்ப்பு வரும் வரை எந்த மாற்றமும் செய்யக்கூடாது புதிய பணி நியமனமும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 47 ஆயிரம் கோவில்கள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதாகவும் 47 ஆயிரம் கோவில்களில் ஆகம முறைப்படி 3000 சிவாலயங்களிலும் 2000 பெருமாள் கோவில்களிலும் 500 இதர கோவில்களுக்கு என தோராயமாக 6 ஆயிரம் கோவில்களில் மட்டுமே பூஜைகள் நடைபெறுவதாகவும் மீதமுள்ள 41,000 கோவில்கள் ஆகம விதிகளுக்கு அடங்காத கோவில்கள் தான் கூறிய அவர், அந்த கோவில்களிலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது தொன்று தொட்டு காலம் காலமாக இருந்து வரக்கூடிய நிகழ்வு தான் எனவும் இங்கு இருக்கக்கூடிய அர்ச்சகர்கள் பலருக்கும் பூசாரிகள் இருக்கக்கூடிய கோவில்கள் தான் குலதெய்வமாக இருக்கும் சூழலில் இங்கு இருக்கக்கூடிய அர்ச்சகர்கள் கூட அந்த கோவில்களின் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய முடியாது என சுட்டிக்காட்டினார்.
தொன்று தொட்டு எல்லா ஜாதியினரும் அச்சகராக இருக்கக்கூடிய நிலை இருந்து வரும் நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு தேவையில்லாத ஒன்றுதான் என்றும் இருந்தாலும் எல்லாரும் அவரவர் பூஜையை தொடந்து செய்ய வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் பாதுகாப்பை தமிழக அரசும் அறநிலையத்துறையும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்தித்தார்.
மேலும் படிக்க | ஜூன் 5 சனி ஜெயந்தி! சனீஸ்வரரின் அருட்கடாட்சம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ