கடந்த செப்டம்பர் 11ம் தேதி நாடி முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.  2 நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அதன் பின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் தேர்வு முடிவை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.  அதனை தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த T.சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இது தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்நிலையில் மாணவி T.சௌந்தர்யா மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  அதில் அவர் கூறியதாவது, "NEET -க்கு மேலும், வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த T.சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்து, பெற்றோராக எனது மன வருத்தத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.  நான், 14.09.2021 அன்று வெளியிட்ட, அறிக்கையின்படி, உடனே ஆசிரியர், உளவியல் நிபுணர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்குங்கள் என்று திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.


மாணவச் செல்வங்களே, விபரீதமான இத்தகைய முடிவினை இனி ஒருபோதும் எடுக்காதீர்கள் என்று உங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.  மாணாக்கர்களே, இனி இந்த அரசை நம்பாதீர்கள். நான் நேற்றே கூறியதுபோல், மருத்துவர் தான் ஆக வேண்டும் என்று இல்லை.42-க்கும் மேற்பட்ட மருத்துவ இணை படிப்புகள் உள்ளன.   மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்  அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு  அவன் நேர்மையின் மறு பிறப்பு,  என்ற பாடல் வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன். மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி இருந்தார்.   மேலும் மருத்துவ இணை படிப்புகள் பற்றிய விவரத்தையும் கூறியிருந்தார்.  நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை சம்பவம் அடுத்தது ஏற்படுகிறது.  உடனே தமிழக அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


 



ALSO READ நீட் ரத்து : திமுக அரசின் பொய்யான வாக்குறுதி - அதிமுக காட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR