2004 ஆம் ஆண்டில், கூகுள் குரோம் உள்ளிட்ட கூகுளின் கிளையன்ட் சாஃப்ட்வேர் தயாரிப்புகளின் தொகுப்பிற்கான தயாரிப்பு நிறுவனத்தை சுந்தர் பிச்சை நடத்தி வந்தார்.  பின்னர் கூகுள் டிரைவ், குரோம் ஓஎஸ் மற்றும் கூகுளில் உள்ள மற்றவற்றையும் இவர் பொறுப்பேற்று நடத்தினார்.  2013-ல், இவரது தலைமையில் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு இவரது கேரியரில் முக்கியமான ஒன்றாக அமைந்தது, இந்த ஆண்ட்ராய்டு முன்னர் ஆண்டி ரூபின் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.  இருப்பினும் இவர் முதன்முதலாக கூகுளில் பணியாற்றவில்லை, இவர் கூகுளில் வேலை செய்வதற்கு முன்னர் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மை மற்றும் எம்சிகின்ஸி & நிறுவனத்தில் மேனேஜ்மேண்ட் கன்சல்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.  அதன் பிறகு தான் இவர் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரின் கடின உழைப்பாலும் திறமையாலும் 2015ல் கூகுள் சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2019 ஆம் ஆண்டில், கூகுளின் சகோதர நிறுவனமான ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.  இவர் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமல்ல, உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.  ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்ட போது, ​​பல கல்வி நிறுவனங்கள் சுந்தர் பிச்சை தங்கள் நிறுவனத்தில் படித்ததாக கூறிவந்தனர்.  தற்போது சுந்தர் பிச்சை அவர் படித்த பள்ளி பற்றிய தகவலை தெளிவுபடுத்தியுள்ளார்.


மேலும் படிக்க | ஒருவேளை நான் மரணமடைந்தால்...சர்ச்சையை எழுப்பிய எலன் மஸ்க் 


சமீபத்திய பேட்டியொன்றில் அவரிடம் அவர் பயின்ற பள்ளி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதுடன், விக்கிபீடியா பக்கத்தில் அவர் படித்ததாக இருக்கும் பள்ளிகளின் பட்டியலை காட்டினார்.  அதற்கு பதிலளித்தவர் விக்கிபீடியாவில் வந்த பெயர்களில் இரண்டு பெயர்கள் சரியானவை என்றும், தான் சென்னையில் உள்ள வன வாணியில் தான் பள்ளிக் கல்வியை முடித்ததாகவும் அந்த பள்ளி ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் அமைந்துள்ளது என்றும் கூறினார்.  மேலும் நான் வீட்டிலிருந்து கல்வி பயின்றதாக சில வதந்திகள் வெளியானது, இந்த தவறான செய்தி விக்கிப்பீடியா தளத்தில் கூட வந்தது.  ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் நான் பள்ளி சென்று தான் படித்தேன் என்று கூறியுள்ளார்.


மேலும் சுந்தர் பிச்சை காரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து உலோகவியல் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றார்.  அதனைத்தொடர்ந்து, அவர் எம்எஸ் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்கில் படிப்பதற்காக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ படித்து முடித்தார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR