மு.க ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று ஒராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் திமுக ஆட்சியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும், சாதனை உள்ளடக்கிய பல்வேறு விவாதங்கள் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய மு.க ஸ்டாலின், தான் மற்றவர்களின் பலத்தை நம்பி அரசியல் செய்பவனல்ல, என்னுடைய பலத்தை நம்பியே அரசியல் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் தனது பலம் தனது இலக்கில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தனது இலக்கை எப்படியும் அடைவேன் எனவும் அதற்கு திராவிட மாடல் என்று பெயர் எனவும் தெரிவித்தார்.  அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்த ஓராண்டு காலத்தில் செய்யக்கூடியதைவிட அதிகமாக செய்துவிட்டோம் என தன்னால் நிச்சயமாக சொல்ல முடியும் என தெரிவித்தார். இன்னும் வேகமாக பணிகளை செய்ய இரண்டு விஷயங்கள் தடையாக உள்ளது என குறிப்பிட்ட ஸ்டாலின் ஒன்று, நிதி நிலை நெருக்கடி மற்றொன்று மத்திய அரசின் சில நிலைப்பாடுகள் என குறிப்பிட்டார். 


மேலும் படிக்க | ரூ1000-ஐ தொட்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை - ரூ50 உயர்வு


பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள்: 


"உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் பேரில் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு" 


"நகர்ப்புர மருத்துவமனைகளில் காலை 8 முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையிலும் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி வழங்கப்படும். 2030க்குள் அனைவருக்கு நல்வாழ்வு என்பதை தமிழ்நாடு எட்டும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" 


"தமிழ்நாட்டில் தலைமை மருத்துவமனைகளில் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் நகர்ப்புர மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிப் பகுதிகளிலும் 63 நகராட்சிப் பகுதிகளிலும் 708 நகர்ப்புர மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும்"


"தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். முதற்கட்டமாக 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல் நிலை பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். கலை, இலக்கியம், இசை போன்றவற்றை கற்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்"


"தமிழ்நாடு முழுவதும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். மருத்துவ வசதி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ வசதியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்படும்"


"தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளில்  மாணவர்களிடமிருந்து திட்டம் துவங்கப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்படும்"


மேலும் படிக்க | முதல்வருக்கு நன்றி.! தமிழில் கடிதம் எழுதிய இலங்கை அதிபர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe