பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என கூறி அது தொடர்பான மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.
பொறியியல் பட்டப்படிப்பில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சேலத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களை அங்கிருந்த திமுகவினரும், பொதுமக்களும் சூறையாடிச் சென்றனர்.
திமுகவில் இந்தி பேசும் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் விரைவில் பானிபூரி விற்கப்போவதை நாம் பார்க்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அனைத்து ஆதீனங்கள் சந்தித்து பட்டிணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோர் மீது முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்ய முற்பட்ட போது பாஜகவினர் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் நடைபெறவுள்ள அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அம்மாநில அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.