தங்கச்சிமடத்தில் மக்கள் தலைவருக்கு மணிமண்டபம்
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் மணிமண்டபம் . இந்தய பிரதமர் மோடி அவர்கள் நாளை திறந்து வைக்கிறார்.
கடந்த 2015 ஜூலை 27ஆம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மரணமடைந்தார். கலாமின் பிறந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கலாமின் அவர்களின் 84-வது பிறந்த நாளான அக்டோபர் 15, 2015 -அன்று பேக்கரும்பில் கலாம் அவர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளான ஜூலை 27, 2016 அன்று மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடக்கப்பட்டன. தற்போது முடிவடைந்த கட்டுமான பணிகள் நிலையில் இந்த மணி மண்டபத்தை பிரதமர் மோடி அவர்கள் நாளை(ஜூலை 27, 2017) திறந்து வைக்க உள்ளார்.
அழகுற வடிவமைக்கபட்ட இந்த மணிமண்டபத்தில் அவரது மார்பளவு உருவச்சிலை, அவர் தொடர்பான 91 ஓவியங்கள், 50 முகத்தோற்றம் கொண்ட ஒரே ஓவியம், 700 -கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கலாம் அவர்களின் பள்ளி பருவம் முதல் துவங்கி அனைத்து நிகழ்வுகளின் புகைப்படங்களும் இடம்பெறுகின்றன. மேலும் மண்டபத்தின் வடிவமானது அக்னி ஏவுகணை, செயற்கைகோள் மாதிரி வடிவங்களை போல் வடிவமைகப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையால் மணிமண்டபம் நேற்றைய தினம் முதல் இந்திய துணை ராணுவதின் கட்டுபாட்டில் வந்துள்ளது. மணிமண்டபம் திறப்பு விழாவானது நாளை காலை 11.45 மணியளவில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.