தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள சபாபதி படத்தின் விளம்பர போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டரில் சந்தானம் (Actor Santhanam) சுவற்றின் மீது சிறு நீர் கழிப்பது போலவும், அந்த சுவற்றில் தண்ணீர் திறந்துவிட கோரி கண்டன ஆர்பாட்டம் திரண்டு வாரீர் என எழுதப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ சிக்கிய சந்தானம்; எஸ்கேப் ஆன அன்புமணி!


குறிப்பாக முல்லை பெரியாறு, கர்நாடகா அணை என அண்டை மாநிலங்களில் தண்ணீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தி வருவதாகவும், இந்த போஸ்டர் போராட்டகாரர்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் விளம்பரத்தில் சந்தானம் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது போல் வெளியிட்டிருப்பது, பொது இடங்களில் அசுத்தமான முறையிலும் நோய் தொற்று பரப்பும் வகையிலும் செயல்படுவது சட்டப்படி குற்றமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


ALSO READ ஜெய் பீம் படத்தால் அடுத்த சிக்கலில் சூர்யா; 5 கோடி நஷ்ட ஈடு


சந்தானம் இது போன்ற செயலில் ஈடுபடுவதால் இதே போல் பொதுமக்கள் பலரும் செய்ய வாய்ப்புள்ளது. உடனடியாக போஸ்டரை நீக்கி நடிகர் சந்தானம் மற்றும் இயக்குனர் சீனிவாசராவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெய்பீம் படத்தில் சமூகத்தில் நடப்பதை மட்டுமே படமாக்கி இருப்பதாகவும், யாரையும் உயர்த்தி காட்டவில்லை என சந்தானம் பேசிய கருத்துக்கு கண்டனர் தெரிவித்துள்ளார்.


ALSO READ நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய அசுரன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR