கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதிநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு லோகநாதன் என்ற மகன் உள்ளார். இவருக்கு வயது 27.  லோகநாதன் லேத் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். லோகநாதனுக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூலித்தொழிலாளியான பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.  இதனால் அவரது மனைவி கன்னியம்மாள் கணவரை விட்டு பிரிந்து  மேவாணியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே தனியாக வசித்து வந்துள்ளார்.


மேலும் படிக்க | Crime: பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை POCSO சட்டத்தின் கீழ் கைது


இதற்கிடையில் தனது மனைவியை அழைத்து வருமாறு பழனிச்சாமி அவ்வப்போது கநாதனிடம் கூறி வந்துள்ளார். ஆனால் லோகநாதன் அதை கண்டுகொள்ளாமல் இருந்து உள்ளார். 


இந்நிலையில் லோகநாதன் புதுக்கரைபுதூரில் பொலவக்காளிபாளையம் ரோட்டில் வயல் காடு பகுதியில் நண்பர்கள் அண்ணாதுரை கோபாலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பழனிச்சாமி மனைவி கன்னியம்மாளை அழைத்து வராதது குறித்து மகனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 


இதில் கோபம் அடைந்த பழனிச்சாமி அரிவாளால் லோகநாதனை சரமாரியாக வெட்டினார். இதனால் லோகநாதனின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த லோகநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அதைத்தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துமணைக்கு கொண்டு சென்றனர். தற்போது இந்த சம்பவம் குறித்து கோபி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகனை வெட்டிய தந்தை பழனிச்சாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


மேலும் படிக்க | போதையில் போலீசையே கல்லால் அடித்த பெண் -வீடியோ!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR