கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில்  தனியார் பேருந்து ஊழியர்கள் இரவு நேரங்களில் மதுபோதையில் பொதுமக்களை பல்வேறு காரணங்களைச் சொல்லி தாக்குவது வாடிக்கையாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஒரு பேருந்தில் மூன்று முதல் நான்கு நடத்துனர்கள் இருந்துகொண்டு பயணிகளை பல்வேறு விதங்களில் மிரட்டுவதும் தாக்குவதும் வாடிக்கையாகி வருகிறது.


இப்படி சாலையில் பயணிக்கும் பொதுமக்களையும் பயணிகளையும் தனியார் பேருந்து நடத்துனர்கள் தாக்கும் வீடியோக்கள் அடிக்கடி சமூகவலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.


மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது - ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பி.எஸ். மனு


ஆனால் காவல்துறை சார்பில் போதுமான நடவடிக்கை இல்லாததாலும், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் தனியார் பேருந்துகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாத சூழல் உள்ளது.


இந்தநிலையில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் பயணிகளைத் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் மதுபோதையில் பேருந்து நிலையத்துக்குள் நின்று ரவுடிசம் செய்து பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று இரவு தனியார் பேருந்து ஊழியர் ஒருவர் பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது மக்கள் ஒருவரை தாக்கும் நிகழ்வும் மதுபோதையில் ரவுடியிசம் செய்யும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


தனியார் பேருந்து ஊழியர்களின் அட்டகாசத்தை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | Draupadi Murmu: யார் இந்த திரெளபதி முர்மு: பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் பின்னணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR