சென்னை: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்ற பாரதியாரின் கனவு இன்றைய காலகட்டத்தில் நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்யும் பணியில் ஆண் பெண் என்ற பேதம் பார்க்காமல், எல்லா வேலைகளையும் பெண்கள் செய்யும் காலம் இது. அதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு உதவியாளராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்


தமிழக சட்டமன்றத்தில் (Tamilnadu Assembly) துபாஷ் என்ற பதவி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை தொடரும் ஒரு பணியாகும்.


சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்லும் சபாநாயகரின் உதவியாளர், துபாய் என்று அழைக்கப்படுவார்.


மேலும் படிக்க | ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லாதது ஏன்?... ஓபிஎஸ்


சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார் மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார் 


1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில்  உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரியார் பிறந்த மண்ணின் பெண்களுக்கு சம உரிமை, சமூக நீதி என்ற சொற்களுக்கு உரிய பொருள் கொடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.



துபாஷ் என்ற பொறுப்பிற்கு தனி சீருடையும் உண்டு. ஆண்கள் மட்டுமே அணிந்து இருந்த இந்த சீருடையே, ராஜலட்சுமிக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 60 வயது எட்டியுள்ள ராஜலட்சுமி, இன்னும் இரு மாதங்களில், அதாவது  வரும் மே மாதம் ஓய்வு பெற உள்ளார் 


தற்போது தமிழக சட்டமன்ற வரலாற்றின் முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி, துபாஷ் சீருடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து தொடரும் இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி. 


மேலும் படிக்க | கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கு..தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR