கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கு..தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

சேலம் மாணவர் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு சிபிசிஐடி, கோகுல்ராஜின் தாயார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Mar 21, 2022, 09:00 PM IST
  • கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கு
  • தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் மனு
  • சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு
 கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கு..தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு title=

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலையில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சுமார் 72 சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 2019 மே 5-ந் தேதி முதல் இவ்வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  விசாரணைகள் முடிவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதீஸ் குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேரை குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரங்கள் கடந்த 8-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், மற்றொரு முக்கிய குற்றவாளியான அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும் மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல் தண்டனையும் மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | சுய சாதி பற்று பல கொடூரத்தை செய்ய காத்துகொண்டிருக்கிறது; விழித்து கொள்வோமா?

இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்பட 10 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக சிபிசிஐடி மற்றும் கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க |  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது - உயர்நீதிமன்றம்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News