மதுரையில் கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் மூன்று வயது குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மாவட்டம் கல்மேடு அருகே உள்ள எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்த லட்சுமி கணவனை இழந்த நிலையில் தன்னுடைய மகள் , மகன், மற்றும் பேரனுடன் இந்த பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மூத்தமகள் ஜோதிகாவுக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 


இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று வந்துவிடும் வாழ்வாதாரம் முடங்கிவிடும் என்ற அச்சத்தில் லட்சுமி (46) அவரது மகளான கொரோனா பாதிக்கப்பட்ட ஜோதிகா (23) மற்றும் அவரது சகோதரரான சிபிராஜ்(13), ஜோதிகாவின் மகனான ரித்தீஷ்(3) ஆகிய நான்கு பேரும் சாணிபவுடர் விஷத்தை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.


ALSO READ | கொரோனாவுக்கு சவால் விடும் மருந்து! வெறும் 35 ரூபாய் மட்டுமே!


இதில் கொரோனா (Corona Virus) பாதிக்கப்பட்ட ஜோதிகா மற்றும் அவரது மகனான 3வயது குழந்தை ரித்தீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஜோதிகாவின் தாய் லட்சுமி மற்றும் சகோதரர் சிபிராஜ் ஆகிய இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிலைமான் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை சம்பவம் குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.


ALSO READ | Deltacron: புதிய டெல்டா- ஒமிக்ரானின் கலவை மாறுபாடால் உலகில் பதற்றம்


கொரோனா அச்சத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தில் அதில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | கையில் தெரியும் ஒமிக்ரான் அறிகுறி! நகம் இப்படி இருந்தல் உடனே சிகிச்சை தேவை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR