திருநெல்வேலியில் வெள்ளம்: தாமிரபரணி மூழ்கும் அபாயம்!
திருநெல்வேலியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தாமிரபரணி ஆற்றில் பாலம் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து இன்று காலை பெய்த கன மழையால் தாமிரபரணி பாலத்தின் இணைப்பு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதனால் ,மக்கள் கடும் சிரம்மத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குமரிக்கடலில் நிலைகொண்ட ஒக்கி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போதெல்லாம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும், இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தாமிரபரணி மட்டுமின்றி மற்ற இம்மாவட்டத்தில் உள்ள பச்சையாறு, கடனா நதி, கருப்பா நதி போன்ற ஆறுகளிலும் கருப்பா நதியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கடையநல்லூர் பகுதியை சூழ்ந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தாமிரபரணி ஆறு பயணப்படும் பாதைகளில் பெரும்பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. வெள்ள காலங்களில் தண்ணீர் வழிந்தோடும் கரைகளில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகியிருக்கின்றன.