வேலூரில் தொடர்ந்து 20 நாட்கள் மேலாக 100 டிகிரி மேல் வெப்பம் வீசுவாதல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும்  அக்னி நட்சத்திரம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது, இதனால் வெப்பம் அதிகமாக காணப்படுவதுடன் அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வேலூர், காட்பாடி, கே. வி.குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கன மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோவை : சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி


கடந்த மே 1 - ம் தேதி 111 டிகிரி வெயில் பதிவாகி உச்சத்தை தொட்ட நிலையில், (07.05.2024) நேற்று 105 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென, மாவட்டத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. அதிகாலை முதல் காலை 9 மணி வரை 5 மணி நேரங்களுக்கு மேலாக காட்பாடி, வேலூர் புதிய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி, விருபாட்சிபுரம், அடுக்கம்பாறை, பள்ளிக்கொண்டா, மேல்பாடி  உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வந்த நிலையில், வெப்ப உஷ்ணம் குறைந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே போல நேற்று கோவையில் மழை பெய்தது.  வெப்பம் வாட்டி வதைத்த காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. 


இந்த நிலையில் நேற்று இரவு காந்திபுரம், ராமநாதபுரம், போத்தனூர், டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில்  இடியுடன் கூடிய பலத்த  மழை செய்தது. கோவை இந்த மழையினால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மேலும் செல்வபுரம் பகுதியில் இடிதாக்கி ஒரு தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது உடனடியாக மத்திய பகுதியிலிருந்து தீயணைப்புத் துறையினர் வந்து அந்த தீயை அணைத்தனர். இதே போல புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர் மாதம்பட்டி வேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ