மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது .இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை ,பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில சித்திரை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 5 ஆம் தேதி முதல் நாளை 8ந் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர். பின்னர் காலை 6 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க | சனி ஜெயந்தி... பாடாய் படுத்தும் ஏழரை சனியிடம் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்!
பக்தர்கள் கோவிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். அமாவாசை வழிபாட்டிற்கு தேவையான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ