கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Heavy Rain: தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு.
வங்க கடலில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுச்சேரி மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எதிரொலி காரணமாக அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது இரவு மற்றும் பகல் நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவிலும் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
நாகை நாகூர் வேளாங்கண்ணி திருப்பூண்டி திருக்குவளை வேதாரண்யம் கீழ்வேளூர் கீழையூர் வாஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது நள்ளிரவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நாகையில் இடைவிடாது வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சாலைகளில் குழம்போல் தேங்கியது. இதனால் அங்கு வாகன ஓட்டிகள் பள்ளமேடு தெரியாமல் வாகனத்தை இயக்குவதில் சிறிது சிரமத்தை சந்தித்தனர். இதைப்போல் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளும் மழை நீரில் தட்டு தடுமாறி அவ்வழியை கடந்து சென்றனர். மாவட்டம் முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து பல மணி நேரம் மழை நீடித்து வருவதால், தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது.
மேலும் கும்பகோணம், திருபுவனம், திருவிடைமருதூர், தாராசுரம் போன்ற இடங்களில் நேற்று மாலையில் இருந்துஇரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அவ்வப்போது கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையிலிருந்து கும்பகோணம் மற்றும் இதை ஒட்டி உள்ள பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வந்தது. நேற்று காலை 8 மணியிலிருந்து நின்று இருந்த மழை மாலை 4 மணியிலிருந்து மீண்டும் பெய்யத் தொடங்கியது. மழை விடாமல் தொடர்ந்து இரவு முழுவதும் பெய்தது. கும்பகோணம், தாராசுரம், திருபுவனம், திருவிடைமருதூர் ஆடுதுறை போன்ற இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் சாய்ந்து பயிர் நாசமாகிவிடும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு! எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ