வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செ.மீ மழையும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் திருத்தணியில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.


வெப்பநிலையை பொறுத்த வரை உள் தமிழக மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும், குறிப்பாக திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும். தென் மேற்கு பருவமழை அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடங்கி மழையை கொடுத்து வரும் நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


சென்னையை பொறுத்து வரை வானம் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், வெப்பநிலை அதிகபட்சம் 39 டிகிரி செல்சியசில் இருந்து, குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.