மதுரை மாநகராட்சி புதிய கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கார்த்திகேயன் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு மக்கள் நல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி, மீன் கடைகளை முறையாக பதிவு செய்ய வலியுறுத்தி அவர்களுக்கு புதிய உரிமை முறையை அறிமுகப்படுத்துகிறார். முறையாக உரிமம் பெறாததால் ரோட்டோரங்களில் கடை அமைத்திருக்கும் இவர்கள் கழிவுகளை ஆங்காங்கே கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இறைச்சிகளில் கலப்படம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதனை தடுக்க தங்களது கடைகளை மாநகராட்சியில் பதிவு செய்து அதற்கு உரிமையை தொகையை செலுத்த வேண்டும். ஒரு சதுர அடிக்கு ரூபாய் 10 வீதம் கடைகளின் அகலத்தை பொருத்து உரிமத் தொகை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாத கடைகளுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.


ALSO READ | தமிழக பெண் ஆயுர்வேத மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்த துபாய் அரசு


அதேபோல் இறைச்சிகளை வதை செய்ய மாநகராட்சியில் (Dump debris) ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செய்ய வேண்டும் மீறி கடைகளில் வதை செய்தால் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கழிவு நீர் வாய்க்கால்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 


மேலும், மக்கள் வீடுகளில் ஆடு,மாடு, நாய், குதிரைகளை வளர்த்தால் அதனை மாநகராட்சியில் பதிவு செய்து ஆண்டுக்கு ரூபாய்.10 வரி செலுத்தவேண்டும் என்று நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் வீட்டில் இருக்கும் கால்நடைகள் பற்றி யாரும் பதிவு செய்வதில்லை. இதனை யாரும் சரியாக பின்பற்றாததால், வீட்டில் பிராணிகளை வளர்த்து முறையாக பராமரிப்பின்றி ரோடுகளில் விட்டுவிடுவதால் பொது மக்களுக்கு நிறைய இடையூறு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய இனி வீட்டில் வளர்க்கும் நாய்கள் பொது மக்களை தொந்தரவு செய்தால் ரூபாய் 500 அபராதமும், குதிரைகளை சாலையில் பராமரிப்பின்றி விட்டால் ரூபாய் 5000 அபராதமும் மற்றும் அதன் பராமரிப்பிற்கு தினமும் ரூபாய் 100 வசூலிக்கப்படும்.


இந்த புதிய நடைமுறைகள் தொடர்பாக மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அபராத விதிப்பு தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மதுரை மாநகராட்சியில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடுகளை தடுக்க மேற்கண்ட நடைமுறைகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


ALSO READ | எஸ்.பி. வேலுமணி மீது பதிவான வழக்குகளின் முழு விவரம் இங்கே


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR