தமிழக பெண் மருத்துவரை துபாய் அரசு பெருமைப்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவர் ஒருவருக்கு துபாய் அரசாங்கம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.
மருத்துவரான நஸ்ரின் பேகம் திண்டிவனத்தில் பிறந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு திருச்சி சங்கரா ஆயுர்வேத கல்லூரியில் படித்து ஆயுர்வேத மருத்துவரானார். இதைத் தொடர்ந்து மருத்துவ பணிக்காக 2013 ஆம் ஆண்டு அவர் துபாய் சென்றார். 2017 ஆண்டு அவருக்கு மருத்துவ உரிமம் கிடைத்தது.
நஸ்ரின் பேகம் மூன்று வருடங்களுக்கும் மேலாக துபாயில் (Dubai) ஆயுஸ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் பார்ட்னராக பணியில் உள்ளார்.
பொதுவாக, துபாயில் 20 கோடிக்கு மேலான முதலீடை செய்பவர்களுக்கு கோல்டன் ஸ்டார் விசா (Golden Visa) வழங்கப்படுகின்றது. ஆனால், முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இது தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.
துபாய் நாடு, அங்கு அதிக முதலீடுகளை செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய கவுரவ விசாக்களை வழங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் 6,800 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இப்படிப்பட்ட கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ: Golden Visa என்றால் என்ன? அது யாருக்கு கிடைக்கும்? பயன்கள் என்ன?
கோல்டன் விசா என்றால் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது. கோல்டன் விசா பெற்றவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் விசாவை புதுப்பிக்க வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம்.
தமிழகத்திலிருந்து இந்த கோல்டன் விசாவை பெற்ற முதல் பெண் மருத்துவர் நஸ்ரின் பேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மே மாதத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசு கோல்டன் விசாவை வழங்கியது.
ALSO READ:Corona Virus: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா ரத்து செய்கிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR