கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கு தொடரபட்டு அவர் வீட்டில் இன்று (செப். 13) லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் இன்று நடந்தப்பட்ட சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1,228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன. இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | இபிஎஸ் தரப்பினர் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியிருக்கும்: வா. புகழேந்தி


தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள எஸ்.பி. வேலுமணி, அமைச்சராக இருந்த 2015 முதல் 2018 வரையான காலகட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் கிராமப்புறங்களில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தை மேற்கொண்டார். இதன் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து, தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்த பணி வழங்கியுள்ளார்.


 


அந்த வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் தெரியவந்தது. அதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையகம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 9 தனிநபர்கள் / நிறுவனங்கள் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 


மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 9 இடங்களிலும், கோயம்பத்தூரில் 4 இடங்களிலும், திருச்சியில் 2 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா 3 இடங்களிலும் என மொத்தம் 31 இடங்களில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று, சென்னையில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அதிமுக போராட்டம் அறிவித்தால் ரெய்டு விடுவதா? திமுக மீது ஜெயக்குமார் சாடல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ