அதிமுக போராட்டம் அறிவித்தால் ரெய்டு விடுவதா? திமுக மீது ஜெயக்குமார் சாடல்

எப்பொழுது எல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கிறதோ, அப்பொழுதெல்லாம் திமுக அரசு ரைடு விடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2022, 02:09 PM IST
  • திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்
  • அதிமுகவினரை பழிவாங்க முயற்சி
அதிமுக போராட்டம் அறிவித்தால் ரெய்டு விடுவதா? திமுக மீது ஜெயக்குமார் சாடல் title=

அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சென்னை அடையாரில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய ஜெயக்குமார், "விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரே வேலை ரெய்டு. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறது.

நாட்டில் பல பிரச்சனை உள்ளது. ஆன்லைன் ரம்மி, கொலை கொள்ளை, அடிப்படை கட்டமைப்பு பிரச்சனை என்று சிங்கார சென்னையை சீர்கேடான சென்னையாக மாற்றி வருகிறார்கள். மடிக்கணினி வழங்கவில்லை, தாலிக்கு தங்கம் திட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டனர். பஸ் கட்டணம், பால் கட்டணம், சொத்து வரி, மின் கட்டணம் என்று பல்வேறு கட்டண உயர்வு பிரச்சனையை பேச விடாமல் திசை திருப்புவதற்காகவே இந்த ரெய்டு. மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் அறிவித்தார். 

மேலும் படிக்க | சசிகலா புஷ்பாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜக பொதுச்செயலாளர்

எப்பொழுது எல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கிறதோ, அப்பொழுதெல்லாம் திமுக அரசு இப்படி ரைடு விடுகிறது. சீப் ஒழிச்சு வெச்சா கல்யாணம் நடைபெறாது என்று அவர்கள் எண்ணக்கூடாது. இன்றைக்கு எசமான் ஸ்டாலின் தான். அவர் கூறுவது தான் காவல் துறை கேட்டு இப்படி ரைடு விடுகிறார்கள். அதுமட்டுமின்றி அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வீட்டு திருமணம் போல நடைபெற்றது. எவ்வளவு செல்வம் இவர்கள் வைத்திருப்பார்கள். விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட வழக்கில், அவருக்கு எந்த பங்கும் கிடையாது. இதற்கு essential certificate வழங்குவது தான் மாநில அரசின் வேலை. இறுதி கையெழுத்து இந்திய அரசாங்கம் தான் வழங்க வேண்டும்" எனக் கூறினார்.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கைகள்: ஆர்.பி.உதயகுமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News