கோவை மாநகரில் வெள்ளக்கிணறு பிரிவில் சாண்டியாகோ மார்ட்டின் குடியிருப்பு இருந்தது.  மார்ட்டின் குழும நிறுவனங்களின் கார்ப்பரேட் அலுவலகம் குடியிருப்புக்கு அருகில் அமைந்திருந்தது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டர் மில்ஸ் (ஜிஎன் மில்ஸ்) பகுதியில் மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி செயல்பட்டு வருகிறது. காந்திபுரம் பகுதி 6வது தெருவில் மற்றொரு அலுவலகம் செயல்பட்டு வந்தது. கோவை மாநகரில் 4 இடங்களில் நேற்று காலை 8 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனையை தொடங்கியது.  இரவு 7.30 மணி வரை தேடுதல் வேட்டை நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினர்... கொந்தளித்த இபிஎஸ் - முழு விவரம்


இந்த ஆண்டு லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.451.07 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ள நிலையில், ஜூலை 2019ல், மார்ட்டினும் மற்றவர்களும் லாட்டரி ஒழுங்குமுறைச் சட்டம், 1998 இன் விதிகளை மீறுவதற்கும், சிக்கிம் அரசை ஏமாற்றி தவறான ஆதாயத்தைப் பெறுவதற்கும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது .  மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் (தற்போது பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (பி) லிமிடெட்) மூலம்  மார்ட்டினுக்கும் சிக்கிம் அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நேர்மையற்ற முறையில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது.  


விற்பனை வருமானம், சிக்கிம் மாநிலத்தின் பொதுக் கணக்கில் விற்பனைத் தொகையை அனுப்பாததன் மூலம் தங்களுக்குத் தவறான ஆதாயத்தைப் பெறுவதற்காகவும், கேரளாவில் சிக்கிம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளிகள் சட்டவிரோதமாக ஏப்ரல் 2009 முதல் ஆகஸ்ட்  2010 வரையிலான காலக்கட்டத்திற்கான பரிசு வென்ற டிக்கெட்டுகளின் கோரிக்கையை உயர்த்தியதன் மூலம் ரூ.  910.3 கோடி மோசடி நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.  மார்ட்டின் தனது லாட்டரி வியாபாரத்தில் இருந்து சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை 40 நிறுவனங்களின் பெயரில் அசையா சொத்துக்களை வாங்குவதற்கு முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் லாட்டரி மாட்டின்க்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  


மேலும் படிக்க | சோட்டா வினோத் முதல் முத்து சரவணன் வரை! 3 மாதங்களில் 5 பேர் என்கவுண்டரில் கொலை! முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ