அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுட்டிருந்தனர். கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்றிருந்த இந்த சோதனை நள்ளிரவு 1.30 மணியளவில் நிறுத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக ஒன்றிய செயலாளர்:


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா  சாமிநாதன். இவர் பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சி.பி.எஸ்.சி பள்ளி நடத்தி வருவதுடன் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார்.  தொழிலதிபரான இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருக்கமாக இருந்தாக கூறப்படுகிறது.


நேற்று முன்தினம் 2 மணியளவில் இரண்டு கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள சாமிநாதனின் வீட்டிலும், வேடசந்தூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்  தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் நேற்று காலை 11 மணியில் இருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது வீட்டில் வீராசாமி அவர்களின் தாயார் சரஸ்வதி மட்டுமே இருந்தார். 


மேலும் படிக்க | நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை!


அவரிடம் செல்போனை வாங்கி வைத்துக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை ஆறு முப்பது மணி வரை சோதனை செய்துவிட்டு அவரிடம் கையெழுத்து பெற்றுவிட்டு கிளம்பினார்.


கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே மீண்டும் தமுத்துப்பட்டியில் உள்ள தோட்டத்து பங்காளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு வீட்டில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு  படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். அந்த வீட்டில் லாக்கர் சாவி இல்லாததால் உதவியாளர் ஒருவரை சாவி எடுத்து வர சொல்லி காத்திருந்து பின்னர் சாவியை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரவில் விடிய விடிய சோதனை நடத்தினர். 


வீரா  சாமிநாதன்,  பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சி.பி.எஸ்.சி பள்ளி நடத்தி வருவதுடன் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார் என்பதும் இவர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 


கட்டுமான நிறுவனத்தில் சோதனை..


கோயம்புத்தூரில், திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் என்ற கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் இல்லத்திலும் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அருண் அசோசியேட் நிறுவனம்தான் கரூரில் செந்தில் பாலாஜின் குடும்பத்தினருக்கு பங்களா கட்டி கொடுத்த நிறுவனம் என கூறப்படுகிறது. அதனால், அமலாக்கத்துறை அதிகாரிகள் இங்கும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 


டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் சோதனை..


கோயம்புத்தூர் இராமநாதபுரம் பகுதியில் வசிப்பவர், டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன். இவரது வீட்டிலும்  அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றது. நேற்று நடைப்பெற்ற இந்த சோதனை நள்ளிரவு 1.30 மணியளவில் முடிந்தது. கோவையில் மட்டும் மூன்று பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


கரூரில் தொடர்ந்து சோதனை:


கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நண்பர்கள் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள்ன் சோதனை நடைப்பெற்று வருகிறது. தனலட்சுமி மார்பிள்ஸ்-பிரகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தவிர, கோவையில் மற்ற மூன்று இடங்களில் நிறைவு பெற்றது. 


மேலும் படிக்க | ராமதாஸ் ஒரு ரவுடி, அவரது மகன் அன்புமணி ஒரு கேடி - வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ