ஏ சும்மா இருய்யா... மாலை போட்ட நிர்வாகியிடம் கடிந்துகொண்ட இபிஎஸ்
மாலை போட வந்த நிர்வாகியிடம் ஏ சும்மா இருய்யா என இபிஎஸ் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானம் எதையும் நிறைவேற்றக்கூடாது என நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் ஓபிஎஸ் தெம்பாக கலந்துகொண்டார்.
அதேசமயம், கட்சியில் முக்கால்வாசி ஆதரவு இபிஎஸ்ஸுக்கு இருப்பதால் இந்தப் பொதுக்குழுவில் இல்லாவிட்டாலும் அடுத்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற கணக்கில் கலந்துகொண்டார் இபிஎஸ்.
ஓபிஎஸ் மண்டபத்துக்கு வந்ததும் அவருக்கு எதிராகவும், இபிஎஸ் வந்ததும் அவருக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மேடையில் பேசிய எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஒற்றைத் தலைமையை ஆணித்தரமாக வலியுறுத்தினர்.
இதற்கிடையே அனைத்துவகை தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமென முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியும் பேசினர்.
இதில் முனுசாமி கூறியது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்தச் சூழலில் ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | கடைசி நேரத்தில் மாறிய காட்சிகள்... அதிமுக பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது?
மேலும், பொதுக்குழுவில் தனக்கு சாதகமான சூழல் நிலவாததை உணர்ந்துகொண்ட ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பாதியில் வெளியேறினார். அதேபோல் அவரது கார் பஞ்சர் ஆக்கப்பட்டதாகவும், அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக நிர்வாகி ஒருவர் பழனிசாமிக்கு மாலை போட முயன்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்போது அந்த நிர்வாகியை பார்த்து, “ஏ சும்மா இருய்யா” என கடுகடுத்தபடி கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஒற்றைத் தலைமை என்பது ஏறத்தாழ முடிவாகிவிட்ட சூழலில் அந்த நாற்காலிக்கு வரும் முன்னதாகவே எடப்பாடி பழனிசாமி கட்சியினரிடம் இப்படி நடந்துகொண்டது அக்கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR