தமிழகத்தில் மின் கட்டணம், குடிநீர் வரி, வீட்டு வரி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. இன்று  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.  அப்போது பேசிய அவர்,, “இந்த விடியா அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகிறது. மக்கள் தினமும் துடித்து கொண்டு இருக்கிறார்கள். சுமார் 15 வருடங்கள் நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கியவர் ஜெயலலிதா. அதிமுகவின் இரு பெரும் தலைவர்களும் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்றியவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் எங்களுக்கு தொண்டர்கள் ஆதரவு உள்ளது.  4 ஆண்டுகள் மக்களுக்கான சிறப்பான ஆட்சியை தந்தோம். ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகிறது, நீங்கள் என்ன செய்தீர்கள். உங்கள் ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல. மக்களுக்கு நன்மை செய்வதற்காக தான்; அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.


மேலும் படிக்க | பள்ளிகளின் சொத்துக்கு பெற்றோர்கள்தான் பொறுப்பு


திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினர், அதை இப்போது வரை நிறைவேற்றவில்லை. திருடன் கையில் சாவியை கொடுத்ததை போல் மக்கள் தவித்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 தரப்படும் என்று சொல்லியது கோவிந்தா, கோவிந்தாதான்.


ஈவு இரக்கம் இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தி ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை பிரிக்கும் கட்சியாக திமுக உள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளது. சிமெண்ட் ஆலைகளை திமுகவினர் நடத்துவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ