சென்னை: கடந்த முறை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு தெளிவான வழங்கிய நிலையில், இன்றைய தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளது இதனால் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அறிவிப்பு. அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தும் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார் பேசினார். அப்பொழுது, எடப்பாடி பழனிச்சாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார். செம்மலையாவது அவருக்கு புத்தி கூறவேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார் என விமர்சித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறியதாவது,


தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளது: 


இதற்கு முன்பாக தனி நீதிபதியின் தீர்ப்பு 75 பக்கங்கள் கொண்டதாக  இருந்தது எல்லாமே தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுக்குழுவை கூட்ட எடுத்த முடிவு தவறு என்றுதான் எங்கள் கருத்து என்றும் கூறினார். கடந்த தீர்ப்பு தெளிவான தீர்ப்பாக வழங்கிய நிலையில், இந்த தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளது. இதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி தான் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு மேல்முறையீடுக்கு செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கட்சி பிரச்சனைகளில் நீதிமன்றங்களுக்கு கட்டுப்பட்டது தான் தேர்தல் ஆணையம். இறுதி தீர்ப்பாக உச்சநீதிமன்றம் சென்றால்தான் கிடைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு சாதகமாக நிச்சயம் வரும் எனவும் பேசினார்.


மேலும் படிக்க: இனி ஓ. பன்னீர்செல்வத்துக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை -ஜெயக்குமார் ஆருடம்


புத்தி தடுமாற்றத்தில் ஈபிஎஸ் உள்ளார்: 


எடப்பாடி பழனிச்சாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார். செம்மலையாவது கூற வேண்டும். பலகாலமாக திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி பெறுவதற்கு முயற்சி செய்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார். அதற்கு செம்மலை துணையாக உள்ளாரா என்பது தான் கேள்வி எழுந்துள்ளது.


ஈபிஎஸ்-க்கு ஆதரவாக தொண்டர்கள் யாரும் இல்லை:


ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக என்ற கேள்விக்கு பதில் அளித்த புகழேந்தி, எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களை சந்திக்கவில்லை. எந்த ஒரு மாவட்டத்திலும் செயல் வீரர்கள் கூட்டம், அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி நான் பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு கேட்கவில்லை. எனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் யாரும் இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.


மேலும் படிக்க: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: பொதுச்செயலாளராக தொடர்கிறார் இபிஎஸ்


அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வி:


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. மேலும் ஓபன்னீர்செல்வம் இதுவரை எப்பொழுதும் ஒற்றை தலைமை நான் தான் இருக்க வேண்டும் என்று கூறியதில்லை. சாதாரண உறுப்பினரை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்தால் ஓபிஎஸ் ஏற்றுக் கொள்வர். எடப்பாடி பழனிச்சாமி சாதாரண தொண்டரை தேர்ந்தெடுப்பாரா என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பினார்.


அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்:


சசிகலா உடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எல்லோரும் இணைய வேண்டும் என்று சொன்னால், ஒன்று சேர்ந்து போக தயாராக உள்ளோம் எனவும் கூறினார்.


மேலும் படிக்க: இபிஎஸ்-க்கு ஆதரவாக வந்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு அருமையான தீர்ப்பு: ராஜேந்திர பாலாஜி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ