தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதி ழுமலையான் கோவிலில் நடைபெறும் பூஜையில் குடும்பத்தினருடன் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து குடும்பத்துடன் கார் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார். அங்கு இரவு தங்கிய முதல்வர், இன்று அதிகாலை குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். 


சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்:- உலக நன்மை, மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டிக்கொண்டேன் என்றார்.