காணொளி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஆறு துறைகளுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பால்வள துறை, உள்ளாட்சித்துறை , சுகாதாரத்துறை , இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டு துறை உள்ளிட்ட துறைகளுக்கான நலத்திட்டங்களை இன்று சென்னை தலைமைசெயலகத்தில் இருந்த படி காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தனர்.




இன்று தொடங்கிவைத்த திட்டங்களில் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு அதிக தொலைவிற்கு பால் பொருட்களை கொண்டு செல்லும் கனரக லாரிகள், ஊராட்சி மற்றும் சுகாதார துறைக்கு புதிய ஜீப்கள், கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் ரயில்வே மேம்பாலம், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் மக்களின் பயனுக்கு என்ற வகையில் உள்ள பல நலத்திட்டங்களை என அடங்கும்.


மேலும், கடலூர், திருச்சி, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில், 137 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 7 ஆற்றுப் பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துவங்கிவைத்தார்!