8 வயது சிறுமியை கடத்தி முத்தம் கொடுத்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரியலூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிறுமிக்கு முத்தம் கொடுத்தும், பாலியல் தொல்லையும் கொடுத்தும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேலும் படிக்க | நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக அரைமணி நேரத்தில் முடிக்கப்பட்ட மாநகராட்சி கூட்டம்
நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாரிமுத்துவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | காஞ்சிபுரம் : பெற்ற மகள்களை துடிதுடிக்க கொலை செய்த கொடூர தந்தை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR