நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக அரைமணி நேரத்தில் முடிக்கப்பட்ட மாநகராட்சி கூட்டம்

உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக கடலூரில் மாநகராட்சி கூட்டம் சரியாக அரை மணி நேரத்தில் முடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 20, 2022, 07:18 PM IST
  • அரை மணி நேரத்தில் முடிக்கப்பட்ட கூட்டம்
  • நெஞ்சுக்கு நீதி - ஆர்வம் காட்டிய கவுன்சிலர்கள்
  • சர்ச்சையை கிளப்பிய சம்பவம்
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக அரைமணி நேரத்தில் முடிக்கப்பட்ட மாநகராட்சி கூட்டம் title=

கடலூர் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று மேயர் சுந்தரி ராஜா தலைமையில் தொடங்கி நடைபெற்றது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 10;30 மணிக்கு தொடங்கியது. ஆனால், மாமன்ற கூட்டம் தொடங்கி சரியாக அரை மணி நேரத்தில் 11 மணிக்கு முடிந்தது. இந்நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் உதயநிதி நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை காண வேண்டும் என்பதற்காகவே கூட்டம் அரை மணி நேரத்தில் முடிக்கபட்டதாக கூறப்படுகிறது. 

nenjukku neethi,udhayanidhi, stalin,Cuddalore,மாநகராட்சி கூட்டம், மாமன்ற கூட்டம்

தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை மேயருக்கு எடுத்துக்கூறி மக்கள் நலன் காக்க வேண்டிய கவுன்சிலர்கள் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை காண்பதற்கு காட்டிய ஆர்வத்தை மக்கள் நலன் காட்ட வேண்டும் என்பதே கடலூர் மாநகராட்சி மக்களின் எதிர்பார்ப்பு. முன்னதாக நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தேவனாம்பட்டினம் பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் ஒருவர் வெளிநடப்பு செய்தார். 

மேலும் படிக்க | காஞ்சிபுரம் : பெற்ற மகள்களை துடிதுடிக்க கொலை செய்த கொடூர தந்தை

அதிமுக ஆட்சிக்காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திமுக அரசு இடம் மாற்றுவதை கண்டித்தும், அதிமுகவை சேர்ந்த 6 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் படிக்க | தந்தையை துண்டு துண்டாக வெட்டி குழித்தோண்டி புதைத்த மகன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News