DMK vs AIADMK: ஆ. ராசா 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது
தனது தேர்தல் பரப்புரையின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விமர்சித்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி, இன்று (வியாழக்கிழமை) அவரை கண்டித்ததுடன், அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புது டெல்லி: தனது தேர்தல் பரப்புரையின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விமர்சித்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி, இன்று (வியாழக்கிழமை) அவரை கண்டித்ததுடன், அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் அவரது தாய்க்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் ஆ. ராஜா பேசியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் இதுகுறித்து அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார்.
அதன்பிறகு ஆ. ராசாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. முதல்வர் குறித்து பேசியது தொடர்பாக தனது விளக்கத்தை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தார்.
ALSO READ | ஆ.ராசாவின் அவதூறு பேச்சு; நாளை நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு
ஆ. ராசாவின் கடிதத்தைப் பரிசீலித்த பிறகு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில், அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை என்பதால், ஆ. ராசா அடுத்த 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அதேபோல நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ. ராசாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இனி எச்சரிக்கையுடன் ஆ. ராசா பேச வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR