சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் லின் தடம் புரண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவை சுமார் 7 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு பட்டாபிராம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம்புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் பாதிப்பில்லாமல் உயிர் தப்பினர்.


இதனையடுத்து, தண்டவாளத்தை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தால் கடற்கரை மற்றும் சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் உள்பட புறநகர்களுக்கு செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், தடம்புரண்ட ரயில் பெட்டியை ஹைட்ராலிக் இயந்திரம் மற்றும் மாற்று என்ஜின் உதவியுடன் கொண்டு சென்றுள்ளனர். சேதமடைந்த தண்டவாளம், மின்போஸ்ட்கள் ஆகியவற்றை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இன்னும் 3 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில்கள் புறப்படும் என சென்னை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.