தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கள்கிழமை தெரிவித்தார். சென்னையில் மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் சந்திதார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் தற்போது உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் வரை உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ஒன்றிய மின் துறை 7 முறையும், மேல் முறையீட்டு ஆணையம் 1 முறையும், ஆர்.இ.பி.சி.எஃப்.சி 5 முறையும், ஒழுங்குமுறை ஆணையம் 18 முறையும் என ஒட்டுமொத்தமாக 28 முறை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், இன்று வேறு வழியில்லாமல், குறிப்பாக அதலபாதாளத்தில் இருக்கக்கூடிய மின்சாரத்துறையை மீட்டெடுக்க தமிழகத்தில் வரக்கூடிய தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறனை நிறுவி நாம் அதை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் படிக்க | நியாயம் கேட்பவர்கள் இப்படிய செய்வார்கள் - கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இப்போது இருக்கக்கூடிய சொந்த மின் உற்பத்தி என்பது வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6220 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் மின் உற்பத்தியை மின்சார வாரியத்தின் உற்பத்தியுடன் இணைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


<p>இந்த நிலையில் அடித்தட்டு மக்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த வித பாதிப்பு இல்லாத வகையில், மின் கட்டண மாற்றங்கள் செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை இப்போது நான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். எனவே கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


இந்த மின்சார கட்டணம் எப்படி, எவ்வாறு உயர்த்தப்படவுள்ளது என்பதன் முழு விவரம்


* தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வவோர்களுக்கு (42.19 சதவீதம் ) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.


* அதனத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலை இல்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.


* வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூபாய் 20 முதல் ரூபாய் 50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள்
குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு முதலியவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.


* இரண்டு மாதங்களுக்கு 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு 27.50 ரூபாய் உயர்த்த பரிசீலனை வழங்கப்படும்.


* இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 72.50 உயர்த்த பரிசீலனை வழங்கப்படும்.


* இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 147.50 உயர்த்த பரிசீலனை வழங்கப்படும்.


* இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 297.50 உயர்த்த பரிசீலனை வழங்கப்படும்.


* இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 155 உயர்த்த பரிசீலனை வழங்கப்படும்.


* இரண்டு மாதங்களுக்கு 700 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 275 உயர்த்த பரிசீலனை வழங்கப்படும்.


* இரண்டு மாதங்களுக்கு 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 395 உயர்த்த பரிசீலனை வழங்கப்படும்.


* இரண்டு மாதங்களுக்கு 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 565 உயர்த்த பரிசீலனை வழங்கப்படும்.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம்... உதயநிதி ஸ்டாலின் vs ரஜினிகாந்த் | சண்டை போட்டுக் கொள்ளும் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ