தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஊருக்குள் புகும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வாறு ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பல இடங்களில் மனித-வன உயிரின மோதல்களும் ஆங்காங்கே நடந்தேறி வருகின்றன.


இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட லிங்காபுரம், பெத்திக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பவானியாற்றின் நீர்தேக்கப்பகுதிகளில் உள்ளதால் வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வருகின்றன.


மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்


அதன் ஒருபகுதியாக சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சம்பரவள்ளி சராகம் பெத்திக்குட்டை பீட் மோதூர் பகுதியில் நேற்றிரவு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் காட்டு யானை ஒன்று குட்டியுடன் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வனச்சரகருக்கு தகவல் தெரிவித்தனர்.


இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட வன அலுவலர் அசோக், உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டியுடன் இறந்து கிடந்த யானை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது, தாய் யானைக்கு சுமார் 20 வயது இருக்கும் என்றும், பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும், தாயும் குட்டியும் இறந்து இரு நாட்கள் இருக்கலாம் என்றும் வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR