உதகையில் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்ட 27 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடக்கம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி சுற்றுப்புற பகுதியில் குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்றுவிட்டு சொகுசு விடுதிகளாக இயங்கிய கட்டடங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 


சொகுசு சுற்றுலா விடுதிகளுக்கு 'சீல்' வைக்கும் பணி இன்று துவங்கியது. சுமார் 27 சொகுசு சுற்றுலா விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்றுவிட்டு சொகுசு விடுதிகளாக இயங்கிய கட்டடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் யானைகள் வழி தட நிலங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கின் விசாரணை செய்த உச்சநீதிமன்றம், யானைகள் வழித் தட நிலம் தொடர்பான உண்மை நிலைமையும், அதில் உள்ள கட்டிடங்களின் தன்மை குறித்தும் நேரில் ஆய்வு செய்து ஆகஸ்டு 8 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.


இதையடுத்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.   


இந்நிலையில், கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 27 ரிசார்ட்டுகளில் உள்ள 275 கட்டடிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. இந்த ரிசார்ட் உரிமையாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. சில இடங்களில் அதிகாரிகள் ரிசார்ட்டுகளில் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பியது. 


இதை தொடர்ந்து, யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்ட 27 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று தொடங்கியது. அப்போது சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.