அடியும் முடியும் அறிய முடியா அருட்பெரும் ஜோதியாக இருப்பவர் சிவபெருமான். அவருக்கு ஆயிரம் ஆயிரம் ரூபங்கள் உள்ளன. ஜோதி ரூபமான சிவபெருமான் பல இடங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது லிங்க வடிவில்தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், அவரது லிங்க வடிவங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த மரகத லிங்கத்தின் புகழ் சொல்லி மாளாதது. அப்படிப்பட்ட ஒரு மரகத லிங்கத்தைப் பற்றிய ஒரு செய்தி தற்போது தமிழகத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.


500 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். 


தஞ்சை மாவட்டம் அருளானந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான சிலைகளை பதுக்கியிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


உடனடியாக அங்கு வந்து, அருளானந்த நகரில் உள்ள சாமியப்பன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.


அப்போது, ரூ.500 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சை மரகத லிங்கம் அவரின் வங்கி லாக்கரில் இருப்பது தெரிய வந்தது.


இதனைத் தொடர்ந்து, சாமியப்பனின் வங்கி லாக்கரில் இருந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை அவரது மகன் அருண் பாஸ்கர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் எடுத்து கொடுத்துள்ளார்.


வங்கி லாக்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மரகத லிங்கத்தை தங்கள் வயப்படுத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் (TN Police), அதை உரிய வழியில் மீட்டுள்ளனர்.


ALSO READ | சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 8 பேர் காயம்.


இதனைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு திருக்குவளை கோயிலில் காணாமல் போன மரகத சிலைதான் இது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


இதனையடுத்து, சாமியப்பனுக்கு மரகத லிங்கம் எப்படி கிடைத்தது? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மரகத லிங்கம்


சிவபெருமானின் (Lord Shiva) ரூபங்களில் மரகத லிங்கமாக அவர் தரும் காட்சிக்கு மிகச்சிறந்த சிறப்புகள் உள்ளன. நவகிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன். புதனுக்கான ரத்தினம் மரகதம். 


புதனுக்கு உகந்த மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை வழிபாடு செய்தால், பக்தர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். 


மரகத லிங்கத்தை வணங்குவதால், ஆகர்ஷன சக்தி, நினைத்ததை முடிக்கும் ஆற்றல், உடல் ஆரோக்கியம், பதவி உயர்வு, கல்வி உட்பட பல யோகங்கள் கைகூடும். மாணவர்களுக்கு புத்தி கூர்மை ஏற்படும், தொழில் விருத்தி அடையும்.


தோஷ நிவர்த்தி செய்யவும் மரகத லிங்க வழிபாடு கைகொடுக்கும். 


இந்திரனால் அளிக்கப்பட்ட மரகத லிங்கங்கள் காணப்படும் தலங்கள் பின்வருமாறு:


கடுமையான தவத்தை மேற்கொண்ட சோழ அரசர் முசுகுந்தர், இந்திரனிடமிருந்து 7 மரகத லிங்கங்களைப் பெற்றார். இவை, திருவாரூர், திருநள்ளாறு, வேதாரண்யம், திருக்குவளை, நாகப்பட்டினம், திருக்கரவாசல், திருவாயுமூர் ஆகிய ஏழு தலங்களில் சிவ ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளன. 


பல வித நன்மைகளை தரக்கூடிய மரகத லிங்கத்தை இந்த கோயில்களில் பக்தர்கள் தரிசித்து அருள் பெறலாம். 


ALSO READ | Corona prevention: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR