Female infanticide: உசிலம்பட்டி குழந்தை மரணம் பெண் சிசுக்கொலையே! தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்

மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், தாயே குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற கொடூரம்! என்று முடியும் பெண்சிசுக் கொலைகள்?

Last Updated : Jan 1, 2022, 01:22 PM IST
  • பாலின சமத்துவம் என்பது கானல்நீரா?
  • உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தை மரணம்
  • தொடரும் பெண் சிசுக்கொலைகள்
Female infanticide: உசிலம்பட்டி குழந்தை மரணம் பெண் சிசுக்கொலையே! தாயின் அதிர்ச்சி வாக்குமூலம் title=

மதுரை: உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பான பிரச்சனையில் தாயின் வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கிறது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி பிறந்த பெண் குழந்தை உயிரழந்தாக வீட்டின் அருகிலேயே புதைக்கப்பட்டது.

இது தொடர்பாக சந்தேகம் எழுந்த நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால், இது பெண் சிசுக் கொலையாக (Female infanticide) இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.  

இதன் அடிப்படையில் விஏஓ முனியாண்டி, சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்து போலீசார் உடற்கூறாய்வு செய்தனர். 

ALSO READ | தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

தலைமறைவாக இருந்த பெற்றோர்களான முத்துப்பாண்டி - கௌசல்யாவை சேடபட்டி போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த இந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாது என நினைத்து கொன்றதாக தாய் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பெற்ற தாயே பெண்சிசுவை சுவற்றில் மோத வைத்து கொலை செய்ததாக கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தாய் கௌசல்யா, தனக்கு மூன்றவதாகவும் பெண் குழந்தையே பிறந்ததால், இந்த குழந்தை வேண்டாம் என்று நினைத்து சுவற்றில் மோதி கொன்றதாக வாக்குமூலம் அளித்ததாக மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Read Also | உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தை மரணம் பெண் சிசுக்கொலையா? 

பெண்சிசு உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் நீடித்து வந்த நிலையில் பெற்ற தாயே பெண்சிசுவை சுவற்றில் மோத வைத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பெண்ணாகப் பிறக்கும் என அறிந்தால், அல்லது பெண்ணாகப் பிறந்தால் அந்தக் குழந்தையைக் கருக்கலைப்பது அல்லது கொலை செய்வதை பெண் சிசுக் கொலை (Female infanticide) என்று கூறுகிறோம். 

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உசிலம்பட்டியில் பெண் சிசுக்கள் கொல்லப்படும் விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் அரசு சட்டங்களை கடுமையாக்கியிருந்தாலும், மறுபுறம் தொட்டில் குழந்தை திட்டம் போன்ற நல்வாழ்வு திட்டங்களையும் செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

பெண் குழந்தைகளை விரும்பாததற்கான காரணம் சமுதாய மற்றும் பொருளாதார ரீதியிலானவை. ஆனால், இன்று காலம் மாறிவிட்ட நிலையில், ஆண்களுக்கு நிகராக, சொல்லப்போனால், ஆண்களைவிட அதிகமாகவே பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னணியில் இருக்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சார செறிவுமிக்க நாட்டில் ஆண் குழந்தையே வாரிசாக கருதப்படுவதால் பெண் குழந்தைகளை அதிகம் விரும்புவதில்லை என்ற வருத்தமான நிலை என்று மாறும்?  

ALSO READ | அம்மாவை பற்றி எல்லை மீறி தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக புகார்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News