தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கோடை காலங்களில் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ளதால் தர்மபுரி மாவட்ட மக்கள் மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும், அண்டை மாநிலங்களான  கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை!


ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின்  வருகை அதிகரித்துள்ளது. ஆயில் மசாஜ் செய்தும், நீர்வீழ்ச்சிகளில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 300 கன அடி ஆக மட்டுமே இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.



இதன் காரணமாக பரிசில் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.  சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள, ஒகேனக்கல் சிறு வியாபாரிகள், மசாஜ் தொழிலாளர்கள், மற்றும் மீன் சமையலாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | கூட்டணியில் சரிபாதி சீட் வேண்டும் - அண்ணாமலை போடும் கணக்குக்கு அதிமுக செவி சாய்க்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ