ஆருத்ரா மோசடி நிறுவன வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை நடப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இனி வாரம் தோறும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும், மோசடி நிதி நிறுவன வழக்குகள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உரிய தகவல்கள் அதில் தெரிவிக்கப்படும். தற்போது ஆருத்ரா, ஹிஜாவு, எல். என்.எஸ்.ஐ.எப்.எஸ் ஆம்ரோ, ஏஆர்டி, எல்பின் ராகத் ட்ரான்ஸ்போர்ட், சி.வி.ஆர்.எஸ் சிட்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. இதில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவி நடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மெரினாவில் பேனா நினைவு சின்னம்! அனுமதி வழங்கியது மத்திய அரசு!
இந்த வழக்குகளை விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புதிதாக மூன்று கூடுதல் சூபிரண்டுகள் மற்றும் ஒரு துணை சூபிரண்டுகள் மற்றும் 80 போலீசார் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், மோசடி நிதி நிறுவன வழக்குகளில் தற்போது வருவாய் துறை அதிகாரி இல்லாமல் சோதனை போன்ற நடவடிக்கைகளை போலீசாரே எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மோசடி நிறுவனங்களில் இருந்து மீட்கப்பட்ட பணத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாகத்தான் ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்க முடியும். ஆருத்ரா நிறுவனம் தொடர்பான வழக்கில் பாஜக பிரமுகர்களின் தொடர்பு பற்றி விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கில் நடிகர் ஆர்கே சுரேஷ் குற்றவாளி இல்லை, அவரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனால் அவரை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் துபாயில் இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது, மேலும் அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு முடிந்த பிறகு தான் இதில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். முதலீட்டாளர்களை கவரும் வகையில் போலி நிறுவனங்கள் ஏதாவது விளம்பரம் வெளியிட்டால் எங்களுக்கு தகவல் கொடுக்கலாம், உடனே குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மோசடி நிதி நிறுவன வழக்குகளில் கைதாகி ஜாமினில் வெளிவந்த குற்றவாளிகள் முதலீட்டாளர்களை குழப்பி புகார்களை வாபஸ் வாங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை பாயும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | Kamal Haasan: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் ஆலோசனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ