Ennore Ammonia Gas Leak: சென்னை எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆலையின் விளக்கமும், அரசின் தடையும்


இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயுக்கசிவால் பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வெளியேறினர். இதற்கிடையில், வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் நலம் விசாரித்த பின் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"நேற்று (டிச. 27) இரவு தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு அக்கம் பக்கத்தில் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற உபாதைகள் ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள் சுகாதாரத்துறை தொடர்பு கொண்ட அடிப்படையில் 16 ஆம்புலன்ஸ் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


மேலும் படிக்க | விஸ்ரூபமெடுக்கும் எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்.. மக்கள் போராட்டம்


மொத்தம் 42 பேர் பாதிப்பு


ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன். எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள். அதேபோல் ஆகாஷ் மருத்துவமனையில் நேற்று இரவு முதல் பல்வேறு உபவாதைகளால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை பற்றி கேட்டு அறிந்தேன். மேலும் நானும், சுதர்சனம் எம்.எல்.ஏ., சங்கர் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் நேரடியாக போய் பார்த்து நலம் விசாரித்தோம். 


அவர்களுக்கான கண் எரிச்சல் தேவையான சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன். அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சியும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து மருத்துவ முகாமையும் பெரியகுப்பம் பகுதியில் மாநகராட்சி பள்ளியில் முகாமை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 36 பேர் ஆகாஷ் மருத்துவமனையில், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 6 பேர் என மொத்தம் 42 பேருமே நலமுடன் இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் வீடுகளுக்கு திரும்புவார்கள்.


பெரிய பாதிப்பு இல்லை


இது சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உடனடியாக முதலமைச்சர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். காவல்துறை இரவு நேரமாக மீட்பு பணிகள் நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். யாருக்கும் எந்த வித பெரிய பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்து இருக்கிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் இல்லை, தீவிர பாதிப்பும்  யாருக்கும் இல்லை. ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 3 குழந்தைகள் காலையில் உணவு சாப்பிட்டிருக்கிறார்கள், எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள். 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் உடைய மருத்துவ செலவு முழுவதும் அரசாங்கம் ஏற்றிக்கொள்ளும். ஒரு ரூபாய் கூட பொதுமக்களிடம் வாங்கக் கூடாது என்று மருத்துவ நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். மேலும் பொதுமக்களிடமும் ஒரு ரூபாய் கூடாது கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறோம். தொழிற்சாலை சம்பந்தமாக அந்த துறை அமைச்சர் பேசி ஆய்வு மேற்கொண்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்" என தெரிவித்தார்.


மேலும் படிக்க | எண்ணூர் வாயு கசிவு... மீனவ மக்கள் வெளியேற்றம் - நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ