தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கோடைகால விடுமுறையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் டெல்லி, மைசூரு, புவனேஸ்வர், போபால் உள்பட 5 இடங்களில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி தேசிய அருங்காட்சியக இயக்குனர் நாஸ் ரிஸ்வி, விஞ்ஞானி சி.ஆர்.மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.