மறைந்த முதல்வர் ஜெ., சிலைக்கு EPS, OPS மாலை அணிவித்து மரியாதை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 71-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின் போது அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கழக நிர்வாகிகளுக்கு முதல்வர் இனிப்பு வழங்கினார்.