ஸ்டாலினை கேள்விகேட்ட இபிஎஸ்: பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!
முதலமைச்சரின் தனி விமானச் செலவை திமுக ஏற்கும் என தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று துபாயில் இருந்து அவர் இன்று அபுதாபி சென்றார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்துக்காக போயிங் தனி விமானத்தை பயன்படுத்தி சென்றதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த பயண செலவு குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் படிக்க | திருப்பூரில் ஐ.பி.எல் ‘ஜெர்ஸி’ விற்பனை அமோகம்.!
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சருடன் துபாய் சென்றுள்ள இவர் அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் மேற்கொண்டு இருக்கக்கூடிய துபாய் வெளிநாட்டு பயணத்தைக் குறித்து இன்றைக்கு விமர்சனம் செய்து பேட்டியினை கொடுத்திருக்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தனி விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது, அந்த நேரத்தில் விமானம் கிடைக்காத காரணத்தினால் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த தனி விமானத்திற்குக் கூட இன்றைக்கு திமுக தான் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறதே ஒழிய, தமிழக அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
மேலும் படிக்க | தமிழகத்தில் மகளிர் பாதுகாப்பாக உள்ளனரா? - மக்கள் நீதி மையம் கேள்வி
இரண்டாவதாக அவர் குடும்பச் கற்று மேற்கொண்டிருப்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். முதலமைச்சருடைய இந்தப் பயணம் என்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டும் அல்ல. அயலகத்திலே கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினுடைய வளத்திற்காகவும். வாழ்விற்காகவும் அவர் இந்தப் பயணத்தை இங்கே மேற்கொண்டிருக்கிறார்.
இன்னொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். நம்முடைய உலக வர்த்தகப் பொருட்காட்சி முடியும் தருவாயில் முதலமைச்சர் அவர்கள் வந்திருக்கிறார் என்று. இது கோவிட் காலத்தினாலேயே தள்ளிப்போய் வந்திருக்கிறது. இன்னொன்று இது ஆரம்பிக்கும்போது வந்திருக்கக்கூடிய வரவேற்பை விட முடியும் பொழுது தான் மிகப் பெரிய கூட்டம் வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் தான் உலகின் பல பகுதியிலிருந்தும் இங்கே வந்திருந்தார்கள். இந்தச் சமயத்தில் வந்து திறந்து வைப்பது தான் சரியான ஒரு வாய்ப்பாக இருக்கும்.
எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகள் குறித்து பேசியிருக்கிறார். நான் கேட்க விரும்புவது, அவர் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. இன்றைக்கு முதலமைச்சர் இந்த மூன்று நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ 6.200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார். வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.” என்று பதிலளித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR