பசும்பொன்னுக்கு படை எடுக்கும் அதிமுகவின் இரு அணி..... முந்திக்கொண்ட ஓபிஎஸ்
முத்துராமலிங்கத்தின் தங்கக்கவசம் யார் எடுப்பது என்ற விவகாரம் குறித்து இபிஎஸ் அணியினர் சென்ற நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியும் சென்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு வரும் 30ஆம் தேதி 115ஆவது ஜெயந்தி விழாவும் 60ஆவது குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது. இந்த நினைவிடத்திற்கு உள்ள முத்துராமலிங்க சிலைக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சச்ராக இருந்த ஜெயலலிதா அதிமுக சார்பில் 13 கிலோ எடை கொண்ட தங்கக்கவசம் அணிவித்தார். அந்த தங்கக்கவசம் அதிமுக பொருளாளர் மற்றும் நினைவாலய பொறுப்பாளர்கள் இருவரின் ஒப்புதலோடு வங்கியில் வைக்கப்பட்டு குருபூஜை நடக்கும் சில நாள்களுக்கு முன்பு எடுத்தது வரப்பட்டு பின்னர் குருபூஜை முடிந்தவுடன் வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். 2014ஆம் ஆண்டு அதிமுக பொருளாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் ஆகியோரின் பொறுப்புகளோடு வங்கியில் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால் எடப்பாடி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பு தங்க கவசத்தின் பொருளாளர் பதவிக்கு வங்கி நிர்வாகத்தில் கடிதம் கொடுத்த நிலையில் இன்று காலை பழனிசாமி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், சிவகங்கை பாஸ்கரன் மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் தங்களுக்கு தங்கக்கவசத்தை எடுக்க ஆதரவு தருமாறு ஆதரவு கடிதம் கேட்க பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் படிக்க | மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடிகளாக அறிவியுங்கள் - சீமான் வலியுறுத்தல்
இதனையடுத்து, ஓ.பி.எஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தர்மர்ம் தேவர் நினைவாலய பொறுப்பாளர்களிடம் மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த தர்மர் இன்னும் நேரம் உள்ளது கட்சியில் கூடி பேசி முடிவெடுத்த பிறகு சொல்கிறோம் என கூறி சென்றுவிட்டார்.
மேலும் படிக்க | பழங்குடியினத்தவர் தற்கொலை - திருமாவளவன் சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ