ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் இன்று கொண்டுவந்த நீட் தேர்வு ரத்து குறித்த தனி தீர்மானம் தவறானது, ஒருபோதும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அவர் அளித்தார்.  ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானத்தை வரவேற்று இருக்கிறார்கள் என்று கூறினார்.


மேலும் படிக்க | டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை! மேட்டுப்பாளையத்தில் சோகம்!


ராணுவமும் தனியார் மயமாகியிருக்கும்


முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜகவிற்கு யாரையும் விமர்சனம் செய்வதற்கு அருகதை கிடையாது.  அவர்களின் பத்தாண்டுகால ஆட்சி எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.  மிகவும் மோசமான, அதுமட்டுமல்ல நாட்டைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி வந்தனர். இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் நமது ராணுவத்தையும் தனியார் மயமாக்கி இருப்பார் பிரதமர் மோடி என்றார்.


பிரதமர் மோடிக்கு தகுதியில்லை


தொடர்ந்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரதமர் மோடியை  எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இவர்களைப் பொறுத்தவரை நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை பற்றி எல்லாம் தெரியாது.மோடி அவர்களே சொன்னார் 1980ல் காந்தி படத்தை பார்த்துதான் காந்தியை பற்றி தெரிந்து கொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவில் தான் இன்றைய பிரதமர் இருக்கின்றார் என்றால் இவர்களது யோகிதை என்ன என்று பார்க்க வேண்டும். நாட்டிற்காக நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் பாகிஸ்தானிடம் இருந்து நாட்டை காப்பாற்றியவர்கள் குறிப்பாக அன்னை இந்திரா காந்தி. 


பாகிஸ்தான் வாலாட்டியபோது நறுக்கியவர்


பாகிஸ்தான் வாலாட்டியது என்ற காரணத்திற்காகவே பாகிஸ்தானை இரண்டாக உடைத்து பங்களாதேஷை ஏற்படுத்தினார். ஆகையால் அவரின் வீரச் செயலை புகழ வேண்டுமே தவிர பொறாமையின் காரணமாக அவரை விமர்சிப்பது தவறு என காட்டமாக பதில் அளித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.


மேலும் படிக்க | 2026 தேர்தல் கூட்டணிக்கு தயராகிறாரா விஜய்... அவர் குறிப்பிடும் சில கட்சிகள் எது..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ